கைத்தறிச் சேலையும் தயார்நிலை ஆடையும்
12:51 AM |
நம் மாணவர்கள் தயார்நிலை ஆடை தயாரிக்கும் பின்னலாடை நிறுவனம் ஒன்றிற்குச் சென்று பின்னலாடை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர். பின்னலாடை உருவாகும் பல நிலைகளைப் பற்றிக் கேட்டுத் தெளிந்தனர்.
வெளிநாட்டுக் கல்விப் பயணத்தில் இறுதி நிலைக்கு வந்த நம் மாணவர்கள் பழம்பெருமை வாய்ந்த கைத்தறி நெசவுக்கூடம் ஒன்றினைக் கண்டனர். அங்கு அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த பெரியவர்கள் இருவர் கைத்தறிச் சேலை செய்வதற்கு வேண்டிய பொருள்களைப் பற்றி விளக்கினர். `சேலை உருவாகும் கலை` குறித்து மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி ஒன்றைச் செய்து காண்பித்தனர். மாணவர்கள் நேரில் கண்டு வியப்படைந்தனர்.
இணைப்புப் படங்கள்.
ஆறாவது நாள் 17.06.2011 (வெள்ளிக்கிழமை)
12:23 AM |
சௌடேஸ்வரி மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளி
கோயம்புத்தூரில் உள்ள முக்கியமான பள்ளிகளில் ஒன்று
சௌடேஸ்வரி மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளி. இதில் சுமார் 3500 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட இப்பள்ளி, தமிழ்மொழிக்கும் பண்பாட்டுக்கும் மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நம் மாணவர்களுக்குச் சாரணப் படையைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் நுழையும்போது சிறப்பு வரவேற்பு அளித்தனர். பள்ளியின் ஆலோசனைக்குழுத் தலைவரும் தலைமை ஆசிரியரும் பள்ளியின் சிறப்பினைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். ஆசிரியர் குழுவினர் மிகச்சிறந்த கலைவிருந்து ஒன்றுக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்து நம் மாணவர்களைச் சிறப்பித்தனர். மூத்த ஆசிரியர் வழிநடத்திச் சிறப்பித்தார்.
தலைமை ஆசிரியர் வாழ்க்கைத் திறனைப் பற்றி மாணவர்களுக்குக் கலந்துரையாடலின்போது விளக்கினார்.
தொடர்ச்சி - புகைப்படங்களின் இணைப்பு
Subscribe to:
Posts (Atom)





